கோலார் : ”தங்கவயல் தாலுகாவுக்கும் யார்கோள் குடிநீர் வழங்க வேண்டும்,” என, கோலாரில் நேற்று நடந்த மாவட்ட வளர்ச்சிப் பணிகள் ஆலோசனக் கூட்டத்தில், காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா வலியுறுத்தினார்.
கோலார் கலெக்டர் அலுவலகத்தில்நேற்று, மாவட்ட பொறுப்பு அமைச்சர் பைரதி சுரேஷ் தலைமையில் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. முதல்வரின் அரசியல் ஆலோசகர் நசீர் அகமது மற்றும் மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில், தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா பேசியதாவது:
தங்கவயல் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டும். கோலார் மாவட்டத்தின் குடிநீருக்காக யார்கோள் அணை திட்டம் ஏற்படுத்தப்பட்டது. இதில், பங்கார் பேட்டை, மாலுார், கோலார் ஆகிய கிராமங்களுக்கு மட்டுமே பயன்படுத்த பைப் லைன் பதிக்கப்பட்டுள்ளது.
பங்கார்பேட்டை தொகுதியின் அருகிலேயே தங்கவயல் தொகுதியும் உள்ளது. எனவே யார்கோள் இரண்டாவது கட்ட திட்டத்திலாவது தங்கவயலுக்கும் தண்ணீர் கிடைக்க செய்ய வேண்டும்.
தங்கவயல் தொகுதிக்கென குடிநீருக்கான நிரந்தர தீர்வு இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட பொறுப்பு அமைச்சர் பைரதி சுரேஷ் கூறுகையில், ”யார்கோள் இரண்டாவது கட்ட திட்டத்தில் ரூபகலாவின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என, அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும்,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement