Rajinikanth: ரஜினி, அஜித், விஜய் அங்கிள்களுக்கு ஜோடியாக நடிக்கணும்: நயன்தாரா 'மகள்'

இமைக்கா நொடிகள் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் மகளாக நடித்து பிரபலமானவர் மானஸ்வி. நடிகர் கொட்டாச்சியின் மகளான மானஸ்வி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான தர்பார் படத்தில் ஒரு பாடலில் வந்து சென்றார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி ஜெயித்தது இப்படி தான் ஜெயிலர் டிரெய்லர் மாஸ்
த்ரிஷாவின் பரமபதம், விஷாலின் எனிமி, விஜய் சேதுபதியின் மாமனிதன், ஹன்சிகாவின் மஹா, சந்தானத்தின் டிடி ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

பேட்டிகளில் க்யூட்டாக பேசி வருகிறார். குட்டி மானஸ்விக்கு ஏற்கனவே ஏகப்பட்ட ரசிகர்கள், ரசிகைகள் இருக்கிறார்கள். பெரிய மனுஷி மாதிரி பேசுகிறார் பாரேன் என தாய்மார்கள் எல்லாம் வியக்கிறார்கள்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் மானஸ்வி கூறியது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. மானஸ்வி கூறியிருப்பதாவது,

ரஜினி அங்கிளுக்கு ஹீரோயினாக நடிக்க வேண்டும். இதை அவரிடமே கூறியிருக்கிறேன். உங்களுக்கு ஹீரோயினாக நடிப்பேன் என தெரிவித்தேன்.

கமல் ஹாசன் சாருடன் சேர்ந்து நடிக்கணும். அவர்களுடன் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால் அந்த ஆசை எல்லாம் நடக்கணும்.

விஜய் அங்கிள், அஜித் அங்கிளுக்கு முதலில் மகளாக நடிக்க வேண்டும். அதன் பிறகு அவர்களுக்கு ஹீரோயினாக நடிக்க வேண்டும்.

என் அப்பா தான் விஜய்யுடன் சேர்ந்து நடித்த அனுபவங்களை என்னிடம் சொன்னபோது எனக்கும் அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது. மகளாக நடித்துவிட்டு அவர்களுக்கே ஹீரோயினாக நடிப்பது ஒரு சூப்பரான அனுபவம்.

நான் யார், யாருக்கு எல்லாம் மகளாக நடிக்கிறேனோ அவர்களுக்கு எல்லாம் ஜோடியாக நடிக்க வேண்டும் என்றார்.

மானஸ்வி பேசியதை பார்த்த சமூக வலைதளவாசிகளோ, என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் பேசுகிறது இந்த குழந்தை. ரஜினி, அஜித், விஜய் வயசு என்ன இந்த சிறுமியின் வயசு என்ன?. அவர்களுக்கு போய் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறதே.

யப்பா கொட்டாச்சி உங்கள் மகளிடம் பேசி புரிய வையுங்கள். சும்மா எதையாவது சொல்லிவிடக் கூடாது. வளர்ந்த பிறகு அய்யோ நான் இப்படி எல்லாமா பேசியிருக்கிறேன் என மானஸ்வி வருத்தப்படக் கூடாது. பேட்டிகளில் என்ன பேச வேண்டும் என்பதை மகளுக்கு சொல்லிக் கொடுங்கள் என தெரிவித்துள்ளனர்.

மேலும் சிலரோ, ரஜினி அங்கிள் என்று கூறி அவருடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் மீனா. வளர்ந்த பிறகு அதே ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவில்லையா?. மீனா செய்தால் தவறு இல்லை. மானஸ்வி ஆசைப்படுவது மட்டும் தவறா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

அண்மையில் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் படத்தில் பேயாக நடித்து அசத்தியிருந்தார் மானஸ்வி. அவரின் நடிப்பை பார்த்தவர்கள் பாராட்டினார்கள். இந்நிலையில் பேட்டியை பார்த்தவர்கள் விமர்சிக்கிறார்கள்.

Ileana: மே மாதமே காதலர் மைக்கேல் டோலனை திருமணம் செய்த இலியானா?

மானஸ்வி இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார். அவ்வப்போது தன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தான் பெற்றோருடன் இருக்கும் புகைப்படங்கள், பிரபலங்களுடன் இருக்கும் புகைப்படங்களை தொடர்ந்து போஸ்ட் செய்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.