காலத்தின் தேவைக்கு ஏற்றவகையில், கடற்றொழில் சார்ந்த சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் ஆகியவற்றினை மெருகேற்றுவதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பான முன்னேற்றங்கள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கா, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த ஆகியோருடன் கலந்துரையாடல் இன்று (7) இடம்பெற்றுள்ளது.