திருகோணமலை விவசாய நிலங்களை பார்வையிட்டு சேருநுவர, காவந்திஸ்ஸபுர கிராமத்தில் வயல் வெளியில் அறுவடையில் ஈடுபட்டிருந்த விவசாயிகளுடன் பிரதமர் (05) கலந்துரையாடியுள்ளார்.
மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தேசிய ஒருங்கிணைப்பு பங்கேற்பு அபிவிருத்தித் திட்டமான ’புதியதோர் கிராமம் – புதியதோர் நாடு’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் தினேஷ் குணவர்தன, கிழக்கு மாகாணத்தில் உள்ள பல விவசாய நிலங்களுக்குச் சென்று விவசாயிகளுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டார்.
காவந்திஸ்ஸபுர விவசாய நிலத்திற்கு சென்றிருந்த போது கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரள மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன ஆகியோரும் பிரதமருடன் இணைந்து கொண்டனர்.