டெல்லி: டெல்லி பிரதேச அரசை கட்டுப்படுத்தும் டெல்லி சேவைகள் மசோதா ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (ஆகஸ்ட் 7) ராஜ்யசபாவில் டெல்லியின் தேசிய தலைநகர் பிரதேச அரசு (திருத்தம்) மசோதா 2023ஐ அறிமுகப்படுத்துகிறார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு பெரும்பான்மை இருப்பதால், ஏராளமான மசோதாக்கள், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளை மீறி நிறைவேற்றப்பட்டு வருகிறது. தேசிய தலைநகரில் சேவைகளை […]
