ரீ-மாஸ்டர் செய்யப்பட்ட 'மூன்று முகம்' படம் ரீ-ரிலீஸ்

பழைய படங்கள் இந்தகாலத்திற்கு ஏற்றபடி ரீ-மாஸ்டர் செய்யப்பட்டு மீண்டும் வெளியாகி வருகின்றன. எம்ஜிஆர், சிவாஜி படங்களை தொடர்ந்து ரஜினி, கமல் ஆகியோரின் படங்கள் மறு வெளியீடு செய்யப்பட்டு வரவேற்பை பெற்று வருகின்றன. அந்தவகையில் ரஜினியின் எவர்கிரீன் படங்களில் ஒன்றான 'மூன்று முகம்' டிஜிட்டல் முறையில் ரீமாஸ்டர் செய்யப்பட்டு சென்னை கமலாஸ் தியேட்டரில் இன்று(ஆக., 6) வெளியாகிறது

ஜனநாதன் இயக்கத்தில் ரஜினி மூன்று வேடங்களில் நடித்து வெளிவந்த படம் மூன்று முகம். அவருடன் ராதிகா, சத்யராஜ், செந்தாமரை, சில்க் ஸ்மிதா உள்ளிட்ட பலர் நடித்தனர். அப்பா ரஜினியாக நடித்த அலெக்ஸ் பாண்டியன் போலீஸ் கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

'மூன்று முகம்' படம் ரீ-ரிலீஸ் பற்றி கமலா சினிமாஸ் உரிமையாளர் விஷ்ணு கமல் கூறும்போது, ​​“ரஜினியின் 'மூன்று முகம்' டிஜிட்டல் முறையில் ரீமாஸ்டர் செய்யப்பட்ட பதிப்பை மீண்டும் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இப்படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆன போதிலும், ரஜினிகாந்த்தின் வசீகரத்திற்காகவும், சூப்பர் ஸ்டாரின் பஞ்ச் டயலாக் மற்றும் ஸ்டைலுக்காகவும் தற்போதைய தலைமுறை இளைஞர்கள் கூட கொண்டாடுகிறார்கள். அவரின் 'ஜெயிலர்' திரைப்படம் ஆகஸ்ட் 10 அன்று திரையரங்குகளில் வெளிவர இருக்கும் இந்த சூழலில், இந்தப் படத்தை மீண்டும் வெளியிடுவதன் மூலம் ரஜினிகாந்த்திற்கும், அவரது ரசிகர்களுக்கும் மறக்க முடியாத ஒரு கொண்டாட்டத்தைக் கொடுக்க விரும்பினோம். இந்த வெளியீட்டை எளிதாக்கிய சத்யா மூவிஸ் தங்கராஜிற்கும் கமலா சினிமாஸ் நன்றி தெரிவித்துக் கொள்கிறது” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.