புதுடில்லி : ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர் மதன் தாஸ் தேவி, ௮௧, சமீபத்தில் உயிரிழந்தார். அவருக்கு, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து கட்டுரை எழுதியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர் மதன் தாஸ் தேவி, சமீபத்தில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
பா.ஜ.,வின் மாணவர் அமைப்பான, ஏ.பி.வி.பி., வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர். ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்திலும் நீண்ட தொடர்பு உள்ளவர்.
அவருக்கு இரங்கல் தெரிவித்து எழுதியுள்ள கட்டுரையில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:
மதன் தாஸ் தேவி உயிரிழந்தார் என்ற செய்தியை நம்ப முடியவில்லை. லட்சக்கணக்கான தொண்டர்களைப் போல, நானும் மிகுந்த வேதனை அடைந்தேன்.
தன்னலத்தை ஒதுக்கி வைத்து, அனைவருடன் இணைந்து செயல்பட்டால், அரிய சாதனைகளை செய்ய முடியும் என்பதற்கு உதாரணமாக விளங்கியவர். தன் வாழ்நாள் முழுதையும், நாட்டுக்காக அர்ப்பணித்தவர்.
அவருடன் நெருக்கமாக இருந்து, பணியாற்றும் வாய்ப்பை பெற்றுள்ளேன். அப்போது அவருடைய மிகவும் எளிமையான வாழ்க்கை முறை, மென்மையான பேச்சு ஆகியவற்றால் கவரப்பட்டேன்.
பல மணி நேரம் பேச வேண்டியதை, ஒரு சில வார்த்தைகளில் தெளிவாக தெரிவிக்கும் திறன் படைத்தவர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement