ஏலம் போகும் ட்விட்டர் பொருள்கள்… எந்த பொருளுக்கு என்ன விலை? அதிரடி காட்டும் எலான் மஸ்க்..!

எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதிலிருந்து அதிரடிகளுக்கு பஞ்சமில்லை. அந்த வரிசையில் தற்போது எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்திற்கு சொந்தமான சில பொருள்களை ஏலமிட திட்டமிட்டுள்ளார்.

இந்த ஏலத்தை ஹெரிடேஜ் குளோபல் பார்ட்னர் என்னும் ஏல நிறுவனம் நடத்த உள்ளது. இந்த ஏலத்தில் ட்விட்டர் பில்டிங்கில் உள்ள பறவை, காபி டேபிள்கள், நாற்காளிகள், DJ பூத்துகள் உள்ளிட்ட 584 பொருள்கள் ஏலமிடப்பட உள்ளன. இந்த ஏலத்தில் இடம்பெற உள்ள பொருட்களில் ஆரம்ப விலை 25 டாலாராம். இந்த ஏலத்திற்கு “Twitter Rebranding: Online Auction Featuring Memorabilia, Art, Office Assets & More!” என்று பெயரிடப்பட்டுள்ளது.

2014-ம் ஆண்டின் அகாடெமி விருதில் பிரபலங்களுடன் எலன் டிஜெனெரஸ் (Ellen Degenere) எடுத்துக்கொண்ட செல்பி, 2012-ம் ஆண்டு பராக் ஒபாமா மீண்டும் பிரதமாரன போது அவர் செய்த ட்வீட் ஆகிய இரண்டும் அப்போதைய காலத்தில் மிகவும் வைரலானது. இந்த இரண்டு நிகழ்வுகளின் ஆயில் பெயிண்டிங்கும் இந்த ஏலத்தில் இடம்பெற உள்ளது.

இந்த ஏலம் வரும் செப்டம்பர் மாதம் 12-ம் தேதி தொடங்கி இரண்டு நாள்கள் நடக்க உள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்த 100 பொருள்களை ஏலமிட்டது. அந்த ஏலத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் லோகோவான பறவை 1,00,000 டாலருக்கு ஏலம் போனது. அதுவே அந்த ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன பொருள் அதுவே!

இதில் எந்த பொருளை நீங்கள் ஏலம் எடுத்தால், எடுப்பீர்கள் மக்களே?

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.