டெல்லி வாக் அவுட்… கறார் கர்நாடகா… காவிரி கூட்டத்தில் தமிழகம் திடீர் வெளிநடப்பு… பின்னணி இதுதான்!

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22வது கூட்டம் இன்று தொடங்கியது. இதில் தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் சார்பில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமை வகிக்கிறார். தமிழகத்தின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்றனர்.

திருப்பூரில் விவசாயி ஒருவருக்கு சுமார் ரூ.3 லட்சத்திற்கு மேல் வருவாய் இழப்பு

கர்நாடகாவிற்கு வலியுறுத்தல்

இதில் காவிரியில் இருந்து உரிய நீரை திறந்துவிட கர்நாடகா மாநிலத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்படும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போதே தமிழக அதிகாரிகள் திடீரென வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, தமிழகத்திற்கு கடந்த 9ஆம் தேதி நிலவரப்படி 37.9 டி.எம்.சி தண்ணீர் பற்றாக்குறை இருக்கிறது.

காவிரி நீர் பிரச்சினை

இதனால் தமிழகத்தில் தினந்தோறும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. இதையொட்டி தமிழக அரசு சார்பில் தொடர்ந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த விஷயத்தை வலியுறுத்தி காவிரியில் இருந்து போதிய நீரை உடனடியாக திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகா அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை கர்நாடகா அரசு ஏற்றுக் கொள்வதாக தெரியவில்லை.

நிரம்பி வரும் கர்நாடகா அணைகள்

அதாவது தர முடியாது என்ற நிலைப்பாட்டில் இருந்தனர். இதனால் நாங்கள் வெளியேறிவிட்டதாக தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக விவசாயிகள் சங்கங்களை சேர்ந்தவர்களிடம் கேட்கையில், தமிழகத்தில் உள்ள பயிர்களை காப்பாற்ற காவிரி நீர் தான் முதன்மையான தீர்வு. கர்நாடகா மாநிலத்தில் உள்ள அணைகளில் 80 சதவீதம் நிரம்பி விட்டது. எனவே போதிய நீரை தாராளமாக அளிக்கலாம்.

ஏமாற்றும் கர்நாடகா அரசு

பருவமழை காலங்களில் ஒவ்வொரு மாதமும் தர வேண்டிய காவிரி நீரை கர்நாடகா அரசு தரவில்லை. இதுபற்றி டெல்லியில் நீர்வளத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது. அப்போது, மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கப்படாது என்று உறுதி அளித்தார்.

அரசியல் லாபம்

அதேசமயம் கர்நாடகா தர வேண்டிய உரிய அளவு காவிரி நீர் குறித்து கேட்கையில், அதை மேலாண்மை ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் எனக் கூறிவிட்டார். அரசியல் சூழலுக்காக காவிரி விவகாரத்தை கட்சிகள் மாறி மாறி பயன்படுத்தி வருகின்றன. தற்போதுள்ள சூழலில் கர்நாடகா காவிரி நீரை திறந்துவிட தயாராக இல்லை.

உச்ச நீதிமன்ற வழக்கு

இதனால் சுமார் மூன்றரை லட்சம் ஏக்கரில் உள்ள பயிர்கள் சேதமடையும் என்பதில் சந்தேகமில்லை. உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக தொடர்ந்து இம்மாதம் வரை தர வேண்டிய காவிரி நீரை பெற்று தர தமிழக அரசு போராட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.