திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே முன்விரோதத்தில் விவசாயி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு, பெட்டிக்கடைக்கு தீவைக்கப்பட்ட சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டது.
நாங்குநேரியில் பிளஸ் டூ மாணவரையும், அவரது தங்கையையும் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் பரபரப்பு அடங்குவதற்குள் இன்று மீண்டும் அப்பகுதி பதற்றத்துக்கு உள்ளானது. நாங்குநேரி அருகேயுள்ள தம்புபுரத்தை சேர்ந்த விவசாயி வானுமாமலை (60). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்குமுன் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.