ரொம்பவும் சந்தோஷமாக கூடிப் பேசி ஆரம்பித்த படம் தான் ‘வணங்கான்’. இரண்டு மாத காலமாக உட்கார்ந்து பேசி கதையின் முக்கியமான பகுதிகளை எல்லாம் தெளிவுபடச் சொல்லித்தான் ஆரம்பித்தார்கள்.
எப்போதுமே இயக்குநர் பாலாவுக்கென ஒரு ஸ்டைல் உண்டு. கதையில் நல்லபடியான மாற்றங்கள் உருவானால் உடனே அதை ஷுட்டிங் ஸ்பாட்டில் கூட சரி செய்து கொண்டு இருப்பார். பிதாமகன் படபிடிப்பின் போதே இதை எல்லோரும் பார்த்திருப்பார்கள். அப்போது இருந்த சூர்யாவைத்தான் மனதளவில் பாலா நினைத்துக் கொண்டு இருக்கிறார். கதையில் மாற்றம், ரீஷுட் செய்வது என்பது சூர்யாவிற்கு சரியாக தோன்றாததால் சுமுகமாக பேசி பிரிந்து விட முடிவெடுத்தார்கள்.

பிறகு அருண் விஜய் படத்திற்கு வந்த பிறகு கதையில் இன்னும் மாற்றங்கள் செய்யப்பட்டன. அருண் விஜய் இந்தப் படத்தை நம்பி அவருக்குத் தெரிந்த தயாரிப்பாளர்களையும் படத்தயாரிப்பில் இணைத்தார். இப்போது கதையும் படப்பிடிப்பும் நிறைவாகவும், தீவிரமாகவும் போய்க்கொண்டு இருக்கிறது. முக்கியமான கதாபாத்திரத்தில் மிஷ்கின் இணைந்து விட்டார். பிசாசு படத்தை தயாரித்தார் பாலா. இருவருக்கும் படம் முடியும்போது சுத்தமாக பேச்சுவார்த்தை நின்று விட்டது. சமீபத்தில் ஒரு திருமணத்தில் பாலாவை மிஷ்கின் சந்தித்த பிறகு எல்லாம் சரியாகி நண்பர்கள் ஒன்று சேர்ந்தனர். இப்போது தனக்குப் பணமே வேண்டாம் உங்களுக்கு நான் கால்ஷீட் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டார் மிஷ்கின்.
இதற்காக 20 நாள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் மிஷ்கின். அதற்குள் தன் போர்ஷனை முடித்துக் கொடுக்கும்படி மட்டும் கேட்டுக்கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதில் வெறித்தனமாக உழைக்கிறார் பாலா. இந்த படத்தில் ஆர்யாவும், விஷாலும் கேமியோ செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாதம் ஒரு தடவையாவது பாலாவை சந்திக்கிற லிஸ்டில் ஆர்யாவும், விஷாலும் இருக்கிறார்கள். இந்த 20 நாள் ஷூட்டிங்கில் மிஷ்கின் – விஷால் பிரச்சனைகளையும் மிஷ்கினிடம் பேசி பாலா சரி செய்து விடுவார் என எதிர்பார்க்கிறார்கள். டிசம்பருக்குள் படத்தை கொண்டு வரவும் முயற்சி நடக்கிறது.