இஸ்லாமாபாத்-பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக, பலுசிஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த எம்.பி.,யான, அன்வருல் ஹக் காகர் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பார்லிமென்டை, அதன் பதவிக் காலம் முடிவதற்கு மூன்று நாட்களுக்கு முன் கலைத்து, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு வெளியிட்டார்; இதை அதிபர் ஆரிப் ஆல்வி ஏற்றார்.
இந்தாண்டு இறுதியில் பார்லிமென்டுக்கு தேர்தல் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தேர்தல் நடக்கும்வரை, இடைக்கால பிரதமரை நியமிக்க வேண்டும். பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரான ராஜா ரியாஸ் இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்.
இதற்கு கடைசி நாளான நேற்று, பலுசிஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த எம்.பி.,யான, அன்வருல் ஹக் காகர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அதிபர் ஏற்றுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement