left hand day | இடது கை தினம்

உலக மக்கள்தொகையில் 10 சதவீதம் பேர் இடது கை பயன்படுத்தும் பழக்கம் உடையவர்கள் என ஐ.நா., ஆய்வு தெரிவிக்கிறது. இவர்களது சாதனைகளை பாராட்டுதல், அவர்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற பொருட்களை தயாரிக்க வலியுறுத்தி ஆக., 13ல் உலக இடது கை பழக்கம் உடையோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இடது கை பழக்கம் ஒருவருக்கு இயற்கையிலேயே அமைந்து விடுகிறது. இது மூளை வளர்ச்சியை பொறுத்து அமைகிறது. இவர்கள் வலது பக்க மூளையை அதிகளவில் பயன்படுத்துவர். இவர்களுக்கு ஞாபக திறன் அதிகமாக இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.