பெங்களூரு:நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட, தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ், 45. தமிழகத்தின் கிருஷ்ணகிரியில் நடந்த, அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க, சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரிக்கு அரசு காரில் வந்து கொண்டு இருந்தார்.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் வந்த போது, அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் காரிமங்கலத்தில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேல்சிகிச்சைக்காக பெங்களூரு சந்தாபூரில் உள்ள, நாராயண ஹிருதாலயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு, பல பரிசோதனைகள் நடத்தப்பட்டன; மருத்துவமனையில், ‘அட்மிட்’ செய்யப்பட்டார்; மீண்டும், ரத்த அழுத்தம், சர்க்கரை, இ.சி.ஜி., உட்பட சில பரிசோதனைகள் செய்யப்பட்டன. ‘ஆஞ்சியோகிராம்’ பரிசோதனை செய்யப்பட்டு, தீவிர கண்காணிப்பில் உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement