புதுடில்லி:டில்லி மாநகராட்சிப் பள்ளியில் 28 மாணவர்கள் விஷ வாயுவை சுவாசித்து மயங்கி விழுந்தது குறித்து விசாரிக்க, நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேற்கு டில்லி நரைனாவில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் நேற்று முன் தினம், திடீரென துர்நாற்றத்துடன் கூடிய விஷவாயு பரவியது.
அதை சுவாசித்த 28 குழந்தைகள் வாந்தி எடுத்து மயங்கிச் சரிந்தனர்.
பாதிக்கப்பட்ட குழந்தைகள் ராம் மனோகர் லோகியா அரசு மருத்துவமனை மற்றும் ஆச்சார்ய பிட்சு மருத்துவமனை ஆகியவற்றில் சேர்க்கப்பட்டனர்.
ராம் மனோகர் லோகியாவில் சிகிச்சை பெற்ற 14 பேர் அன்று இரவும், ஐந்து பேர் நேற்று காலையும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆச்சார்யா பிட்சுவில் சேர்க்கப்பட்ட அனைத்து குழந்தைகளும் சிகிசைக்கு பின் அன்று இரவே அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், டில்லி மாநகராட்சியின் கரோல்பாக் துணை கமிஷனர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நரைனா பள்ளியில் மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து விசாரிக்க, மண்டல கண்காணிப்பு பொறியாளர், உதவி ஆணையர், மாநகராட்சி கல்வித் துறை துணை இயக்குனர், மற்றும் சுகாதாரத் துறை துணை இயக்குனர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement