நாங்குநேரி சம்பவத்திற்கு காரணம் சாதி சினிமாக்களா..? அன்புமணியே இப்படி சொல்லிட்டாரே..

சென்னை:
நாங்குநேரியில் பட்டியலின மாணவன் சக மாணவர்களால் வெட்டப்பட்ட சம்பவம் குறித்து பாமக தலைவர்

கூறியுள்ள கருத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நாங்குநேரியில் நடைபெற்றுள்ள கொடூர சம்பவம்தான் இன்று தமிழகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. பட்டியலின வகுப்பைச் சேர்ந்த சின்னதுரை என்ற பள்ளி மாணவனும், அவனது தங்கையும் சக மாணவர்களால் வெட்டப்பட்டது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தாக்குதலுக்கான இருவரும் தற்போது நெல்லையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்தை முன்வைத்து பல அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, சாதி ரீதியில் எடுக்கப்படும் சினிமாக்களே இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுவதற்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. இதில் தலித் அரசியல் பேசும் மாமன்னன், கர்ணன் போன்ற திரைப்படங்களை எடுத்த மாரி செல்வராஜின் பெயரும், இயக்குநர் பா. ரஞ்சித்தின் பெயரும்தான் அதிக அளவில் அடிபடுகிறது. மறுபுறம், ஆதிக்க சாதிகளை தூக்கிப் பிடிக்கும் இயக்குநர்களான முத்தையா, மோகன்ஜி ஆகியோர் மீதும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

இந்த சூழலில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸிடம் நாங்குநேரி சம்பவம் குறித்து பேசிய நிருபர்கள், “சாதி ரீதியில் எடுக்கப்படும் சினிமாக்கள்தான் நாங்குநேரி சம்பவத்திற்கு காரணம் என சிலர் கருத்து தெரிவிக்கிறார்களே..?” எனக் கேள்வியெழுப்பினர். அதற்கு அன்புமணி ராமதாஸ் எதை பற்றியும் யோசிக்காமல், “அதுவும் உண்மையாக இருக்கலாம்” என பதிலளித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.