பெங்களூரு பெங்களூருவில் மாநகராட்சி அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பெண் உள்ளிட்ட மூவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. நேற்று முன்தினம் பெங்களூரு மாநகராட்சி அலுவலக கட்டிடத்தில் உள்ள ஆய்வகம் ஒன்றில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு மாநகராட்சி அதிகாரிகள் மனோஜ்(வயது 32), கிரண்(35), சீனிவாஸ்(37), சிராஜ்(29), ஸ்ரீதர்(38), சிவக்குமார்(40), சந்தோஷ் குமார்(47), விஜயமாலா(27), ஜோதி(21) ஆகிய 9 பேருக்குத் தீக்காயங்கள் ஏற்பட்டு உயிருக்கு போராடினர். தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியில் […]
