வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருவனந்தபுரம்: காய்ச்சலுக்காக ஊசி போட வந்த குழந்தைக்கு ரேபிஸ் தடுப்பூசி போட்ட நர்ஸ் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
![]() |
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ளது அங்கமாலி நகரம். இங்கு காய்ச்சலால் பாதிக்கபட்ட ஏழு வயது குழந்தையை பெற்றோர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஊசி போட அழைத்து சென்றனர்.ரத்த பரிசோதனைக்காக ஆய்வகத்தின் முன்பாக குழந்தையை அமரவைத்து விட்டு பெற்றோர் பில்களை செட்டில் செய்ய சென்றிருந்தனர். அப்போது ஆய்வகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்து வந்த நர்ஸ் ஒருவர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட வேறொரு குழந்தைக்கு செலுத்த வேண்டிய ரேபிஸ் மருந்தை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு செலுத்தி உள்ளார்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக ரேபிஸ் மருந்து செலுத்தப்பட்ட குழந்தை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து கண்காணித்த மருத்துவர்கள் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்தனர்.
வெறிநாய்கடிக்கான தடுப்பூசியால் பக்கவிளைவுகள் எதுவும் இல்லை என்பதாலும்,குழந்தைக்கு எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாது என்பதாலும், சம்பவம் குறித்து பெற்றோர்கள் புகார் எதுவும் தர போவதில்லை என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் போலீசார் பெற்றோரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
![]() |
இதனிடையே மாநில சுகாதாரத்துறை சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் சம்பந்தப்பட்ட நர்சை பணி நீக்கம் செய்யவும் உத்தரவிட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

