நீட் தேர்வு தோல்வி காரணமாக உயிரை மாய்த்துக் கொண்ட ஜெகதீஸ்வரன் மற்றும் அவரது தந்தையின் மரணம் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. நீட் எனும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற மூன்று நான்கு ஆண்டுகள் பயிற்சி மையங்களில் சேர்ந்து லட்சக்கணக்கில் செலவு செய்தால் மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்து படிக்க முடியும் அல்லது கோடிக்கணக்கான ரூபாயை கட்டணமாக கொடுத்து தனியார் கல்லூரிகளில் பயில முடியும் என்ற நிலையால் மருத்துவ படிப்பு வசதி படைத்த மாணவர்களுக்கானதாக உருவாக்கப்பட்டு உள்ளது. […]
