“மார்க் ஒரு சிக்கன்” – சீண்டிய எலான் மஸ்க்… சூடுபிடிக்கும் சண்டை…

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய உலகின் பெரும் பணக்காரர் எலான் மஸ்க், அதிரடியான மாற்றங்களை நிகழ்த்தி வருகிறார். ஒரே நாளில் ட்விட்டர் ஊழியர்கள் பெரும்பாலானோரை வேலையில் இருந்து நீக்கி வீட்டுக்கு அனுப்பினார்.

எலான் மஸ்க் எடுக்கும் முடிவுகள் கோமாளித்தனமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்களை கிளப்பின. ஒரு கட்டத்தில் ட்விட்டரின் பெயரையே மாற்றி ‘x’ என்று பெயரிட்டார் எலான் மஸ்க்.

இதனிடையே ட்விட்டருக்கு போட்டியாக அதே வசதிகளைக் கொண்ட த்ரெட்ஸ் என்ற சமூக வலைதளத்தை உருவாக்கினார் மெட்டா நிறுவனத்தின் மார்க் ஜூக்கர்பெர்க். ஆரம்பித்த ஒரு வாரத்திலேயே 10 கோடி பயனர்களை எட்டியது த்ரெட்ஸ். இதனால் எலான் மஸ்க் மற்றும் மார்க் ஜூக்கர்பெர்க் இடையே உரசல் நிலவி வந்தது.

இருவரும் சமூக வலைதள பக்கங்களில் மாறி மாறி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். கடந்த 11ஆம் தேதி எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் இத்தாலியில் தனக்கும் மார்க்குக்கும் குத்து சண்டைப் போட்டி நடைபெறும் என பதிவிட்டார்.

கவனம் மக்களே – பாக்கெட்டில் திடீரென வெடித்து சிதறிய செல்போன்… தொழிலதிபர் காயம்!

இந்த நிலையில் மார்க் தனது த்ரெட்ஸ் பக்கத்தில், “எலான் மஸ்க் பேசுவதை சீரியஸாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவற்றை கடந்துசென்றுவிட வேண்டும். நான் எலான் மஸ்கிற்கு நேரம் ஒதுக்கினேன். ஆனால், அவர் தேதியை உறுதி செய்யவில்லை. தனக்கு அறுவை சிகிச்சை நடக்க இருப்பதாக தெரிவிக்கிறார்.

டெஸ்லா முதல் டிவிட்டர் வரை

இப்போது அதற்கு பதிலாக கொல்லைப் புறத்தில் பயிற்சி செய்யும்படி கேட்கிறார். சரியான தேதியை எலான் மஸ்க் தீவிரமாக எடுத்துக்கொண்டால், என்னை எப்படி அணுகுவது என்பது அவருக்கு தெரியும். மற்றபடி, இவற்றை கடந்து சென்றுவிடுவோம். நான் எதையும் சீரியஸாக எடுத்துக்கொள்ளும் நபர்களுடன் போட்டியிடுவதில் என்னுடைய முழு கவனத்தையும் செலுத்தப் போகிறேன்” என்று தெரிவித்தார்.

செல்போன் வாங்கி தரேன்… சிறுமியை சீரழித்த அரசு ஊழியர்.. கட்டி வைத்து அடித்த மக்கள்..

இதனை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ஒருவருக்கு பதிலளித்த எலான் மஸ்க், “மார்க் ஜூக்கர்பெர்க் ஒரு சிக்கன்” என்று விமர்சித்துள்ளார். முன்னதாக தனக்கு தோள்பட்டை மற்றும் கழுத்து பகுதியில் வலி இருப்பதால் அதற்காக அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாகவும், அதன்பிறகு சில மாதங்கள் ஓய்வெடுக்க வேண்டும் எனவும் எலான் மஸ்க் அண்மையில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.