ராயல் ஒரு நாள் கோப்பையில் பிரித்வி ஷா இரண்டாவது சதம் விளாசினார். லண்டன் ஒரு நாள் கோப்பையில் பிருத்வி ஷாவின் கனவு ஓட்டம் தொடர்ந்தது, இந்த சீசனின் இரண்டாவது சதத்தை அடித்து நொறுக்கினார். பிரத்வி ஷா தற்பொழுது இங்கிலாந்து கவுண்டி அணியான நார்த்தாம்டன்ஷைர் அணிக்காக ஒப்பந்தமாகி, தற்பொழுது நடந்து வரும் ஒன் டே கப் ட்ராபிக்காக விளையாடி வருகிறார்!
இதற்கு முன்பு இந்த அணிக்காக கடந்த போட்டியில் சோமர்செட் அணிக்கு எதிராக 153 பந்துகளில் 244 ரன்கள் குவித்த பிருத்வி ஷா, லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இங்கிலாந்து மைதானத்தில் இந்திய பேட்ஸ்மேன் அடித்த அதிகபட்ச ரன் என்ற சாதனையை பதிவு செய்தார்.
நார்த்தாம்டன்ஷைர் அணி மற்றும் டர்ஹாம் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டர்ஹாம் அணி 43.2 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 198 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. நார்த்தாம்டன்ஷைர் அணியின் தரப்பில் லியூக் புரக்டர் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
டர்ஹாமுக்கு எதிராக 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பிருத்வி ஷா, 68 பந்துகளில் சதம் அடித்து, தனது அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற உதவினார்.
பிருத்வி ஷா 76 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்களுடன் 125 ரன்கள் குவித்தார்.
Prithvi Shaw brings up his 10th List A century in 68 deliveries, with fourteen 4s and four 6s. pic.twitter.com/7kOo1yVMkF
— Northamptonshire CCC August 13, 2023
ராயல் லண்டன் ஒரு நாள் கோப்பையில் ஷா சிறந்த ஃபார்மில் இருந்த 23 வயதான பேட்டர், இதற்கு சோமர்செட்டுக்கு எதிராக 153 பந்துகளில் 244 ரன்கள் குவித்தார் என்றாலும், அவர் உடல் தோற்றம் தொடர்பான உருவகேலிக்கு ஆளானதும் குறிப்பிடத்தக்கது.
பிருத்வி ஷாவின் அதிரடி ஆட்டத்தைப் பார்த்த கிரிக்கெட் நிபுணர்கள் பலரும், அவரை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டனர். ஏற்கனவே, ஜீனியர் சச்சின் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் பிருத்வி ஷாவில் புகழ் மகுடத்தில் மற்றுமொரு மயிலிறகு சேர்ந்துவிட்டது.
முன்னதாக, பிருத்விஷாவின் வெற்றி குறுகிய காலத்திற்கானதாக இருந்தது, ஏனெனில் அவர் மோசமான பார்ம் மற்றும் உடற்தகுதி காரணமாக 12 ஆட்டங்களுக்குப் பிறகு இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
தற்போது பிருத்வி ஷா, இந்தியாவின் உலகக் கோப்பை அணிக்கான கணக்கீட்டில் இல்லை. மேலும், ஷுப்மான் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற வீரர்களுடன் ஒப்பிடும்போது அவர் பின்தங்கியிருக்கிறார். பிருத்வி ஷாவிற்கு சாதகமன விஷயம் என்னவென்றால், அவரது வயதுதான்.
23 வயது பேட்ஸ்மேன், தனது உடற்தகுதியை மேம்படுத்திக் கொண்டால் இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க நல்ல வாய்புகள் உள்ளன. அவரது நிலையான செயல்பாடுகள் நிச்சயமாக அவரை தேர்வாளர்களின் கவனத்தை ஈர்க்கச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.