Leopard caught after attacking girl in Tirupati; Devotees are relieved | திருப்பதியில் சிறுமியை தாக்கிய சிறுத்தை சிக்கியது; பக்தர்கள் நிம்மதி

திருப்பதி : திருப்பதி மலைப்பாதையில், வனத்துறை கூண்டில் சிறுத்தை சிக்கியது. இதனால் பக்தர்கள் நிம்மதியடைந்தனர்.

திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் கடந்த வெள்ளிக்கிழமை சிறுத்தை தாக்கி 6 வயது சிறுமி உயிரிழந்தார். இதனால் மலைப்பாதையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்து, சிறுமியை தாக்கிய சிறுத்தையை பிடிக்க மலைப்பாதை அருகே வனத்துறையினர் 3 கூண்டுகளை அமைத்தனர்.

இன்று அதிகாலையில் வனத்துறையினரின் கூண்டில் சிறுத்தை சிக்கியது. நிர்வாக அதிகாரி ஏவி தர்மா ரெட்டி சிறுத்தை பிடிபட்ட இடத்தை இன்று பார்வையிட்டார். வனவிலங்குகள் பிரச்னை தீரும் வரை யாத்ரீகர் பக்தர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு தேவஸ்தானம் எடுத்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதற்கு பக்தர்கள் தங்கள் ஒத்துழைப்பை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.