பெங்களூரு : ”நாட்டுக்காக நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினால், சுதந்திர நுாற்றாண்டில் பொற்காலம் அமையும்,” என, கவர்னர் தாவர்சந்த் கெலாட் பேசினார்.
சுதந்திர தின விழாவை ஒட்டி, பெங்களூரில் உள்ள ராஜ்பவனில், கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், நேற்று தேசியக்கொடி ஏற்றினார்.
அவர் ஆற்றிய உரை:
கர்நாடகா ஒரு முற்போக்கான மாநிலமாகும். ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை மேம்படுத்துவதற்காக, ஐந்து வாக்குறுதி திட்டங்களை அரசு வகுத்துள்ளது.
இதில், ‘கிரஹ ஜோதி, அன்ன பாக்யா, கிரஹ லட்சுமி’ அரசு பஸ்களில் மகளிருக்கு இலவச பயணம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நம் நாட்டின் பொருளாதாரம் உலகின், ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது.
அடுத்த 24 ஆண்டுகள் முக்கியமான கால கட்டம். அதற்குள் நமது நாட்டை உலகின் வளர்ந்த நாடுகளின் பட்டியலில் சேர்க்க வேண்டும். இதற்கு அனைவரும் உழைக்க வேண்டும்.
உலகின் பல நாடுகள் இந்தியாவை மரியாதையுடன் பார்க்கின்றன. நாட்டுக்காக நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினால், சுதந்திரத்தின் நுாற்றாண்டு விழா, பொற்காலமாக அமையும்.
இவ்வாறு அவர்பேசினார்.
தேநீர் விருந்து
சுதந்திர தினத்தை ஒட்டி, கவர்னர் தரப்பில் ராஜ்பவனில் நேற்று முக்கிய பிரமுகர்களுக்கு தேநீர் வழங்கப்பட்டது. முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். பா.ஜ., – ம.ஜ.த., தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. ம.ஜ.த., – எம்.எல்.சி.,க்கள் சிலர் மட்டும் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement