Harold das- rolex: ஹரோல்ட் தாஸ் – ரோலக்ஸ்.. அப்பா – மகனா ? கண்டிப்பாக கிடையாது..ஏன் தெரியுமா ?

விஜய்யின் லியோ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கின்றது என்பது அனைவருக்கும் தெரியும். இன்னும் சொல்லவேண்டுமென்றால் இப்படத்தின் பூஜைக்கு முன்பே அனைவரும் லியோ படத்தை தான் ஆவலாக எதிர்பார்த்து இருந்தனர். அதற்கு மிக முக்கிய காரணம் லோகேஷ் உலகநாயகனை வைத்து செய்த சம்பவம் தான்.

விக்ரம் என்ற படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் தன் பக்கம் திரும்பி பார்க்க செய்தார் லோகேஷ். LCU என்ற விஷயத்தை விக்ரம் படத்தில் வைத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். மேலும் ரோலக்ஸ் என்ற ரோலில் சூர்யாவை நடிக்க வைத்து அசரவைத்தார் லோகேஷ்.

ஹரோல்ட் தாஸ் – ரோலக்ஸ்

எனவே தான் இவரின் அடுத்த படமான லியோவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கின்றது. மேலும் லோகேஷ் லியோ படத்தை முழுக்க முழுக்க தன் ஸ்டைலில் உருவாக்க இருக்கின்றார் என்பது கூடுதல் சிறப்பு. இந்நிலையில் தற்போது லியோ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

Rajini: நீங்க ஹீரோவா ? ரஜினியை பார்த்து கேட்ட ரசிகன்..ஓபனாக பேசிய தலைவர்..!

இதையடுத்து கடந்த மாதம் சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படக்குழு ஒரு கிலிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. ஆண்டனி தாஸ் என்ற ரோலில் அந்த கிலிம்ப்ஸ் வீடியோவில் செம மாஸாக இருந்தார் சஞ்சய் தத். இதையடுத்து தற்போது அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் கதாபாத்திரத்திற்கான கிலிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஹரோல்ட் தாஸ் என்ற கதாபாத்திரத்தில் அர்ஜுன் லியோ படத்தில் நடித்துள்ளார். செம மிரட்டலான வெளிவந்த இந்த கிலிம்ப்ஸ் வீடியோவை ரசிகர்கள் அலசி ஆராய்ந்து வருகின்றனர். அந்த வகையில் ரசிகர்கள் சிலர் ஹரோல்ட் தாஸ் கிலிம்ப்ஸ் வீடியோவை டீகோட் செய்து இப்படம் கண்டிப்பாக LCU தான் என கூறி வருகின்றனர்.

அப்பா -மகனா ?

அதாவது ஹரோல்ட் தாஸ் தான் ரோலக்ஸ் அப்பா என்றும், ஆண்டனி தாஸ் தான் லியோ வின் அப்பா என்றும் ஒரு சிலர் ரசிகர்கள் கூறி வருகின்றனர். அண்ணன் தம்பியாக இருக்கும் ஆண்டனி தாஸ் மற்றும் ஹரோல்ட் தாஸ் எதிரிகளாக மாறி பின்பு ரோலக்ஸ் மற்றும் லியோ இருவருக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் லியோ படத்தின் கதைக்கருவாக இருக்கும் என ரசிகர்களே ஒரு கதையை உருவாக்கி இருக்கின்றனர்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இதெல்லாம் கேட்கும்போது செமையாக இருந்தாலும் படம் வந்த பிறகு தான் உண்மை கதை என்ன என்பது தெரியவரும். ஆனால் கண்டிப்பாக ரசிகர்களால் கணிக்கமுடியாத ஒன்றை லோகேஷ் படத்தில் வைத்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்துவார் என்பது மட்டும் உறுதியாக நாம் சொல்லலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.