சென்னை: நடிகர் விஜய் -லோகேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ படம் வரும் அக்டோபர் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. படத்தின் சூட்டிங், பேட்ச் வொர்க் உள்ளிட்டவை நிறைவடைந்து தற்போது முழு வீச்சில் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது நார்வேயில் சுற்றுலா கொண்டாட்டத்தில் நடிகர் விஜய் உள்ளார்.