இம்ரானை கொல்ல சதி: மனைவி புஷ்ரா கதறல்| Conspiracy to kill Imran: Wife Bushra screams

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் ஊழல் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விஷம் கொடுத்து கொல்ல சதி நடப்பதாக அவரது மனைவி புஷ்ரா பீபி கூறியுள்ளார்.

அரசு கருவூல பரிசுப் பொருட்களை முறைகேடாக விற்பனை செய்த வழக்கில் இஸ்லாமாபாத் நீதிமன்றம் இம்ரான் கானுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து இம்ரான் கானை கைது செய்த போலீசார் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டாக் சிறையில் அடைத்து உள்ளனர்.

இந்நிலையில் பஞ்சாப் மாகாண உள்துறை செயலாளருக்கு புஷ்ரா பீபி எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: எந்தவித நியாயமும் இல்லாமல் சிறையில் என் கணவர் அடைக்கப்பட்டுள்ளார். சட்டப்படி அவரை அடிலா சிறையில் தான் அடைக்க வேண்டும். அவரது சமூக மற்றும் அரசியல் அந்தஸ்தை கருத்தில் கொண்டு பி கிளாஸ் வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.

இம்ரான் கானை படுகொலை செய்ய இரண்டு முறை சதி நடந்தது. இதில் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவரது உயிருக்கு இன்னும் ஆபத்து உள்ளது. சிறையில் விஷம் கொடுத்து கொலை செய்யப்படலாம் என்ற அச்சம் உள்ளது. இவ்வாறு அந்த கடிதத்தில் புஷ்ரா பீபி கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.