ரஷ்ய விண்வெளி ஆய்வு மையமான ரோஸ்கோஸ்மோஸ் கடந்த 10ஆம் தேதி லூனா 25 என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது.அடுத்த கட்டமாக லூனா நிலவின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது. நிலவின் தென் துருவத்தில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி லூனா விண்கலத்தை தரையிறக்க ரஷ்யா திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில லூனா 25 விண்கலத்தில் நேற்று தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தற்போது லூனா 25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியதாக ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
திருப்பதியில் அடியோடு குறைந்த கூட்டம்… ஒரு நாளைக்கு 4000 பேர்தான்!
லூனா 25 விண்கலத்தின் கடைசி சுற்றுவட்டப் பாதையை குறைப்பதற்காக உந்துவிசை அமைப்பில் மாற்றம் செய்யப்பட்ட போது ஏற்பட்ட விலகல் காரணமாக லூனா 25 விண்கலம் நிலவில் மோதியது. இதனை தொடர்ந்து லூனா 25 விண்கலத்தை தொடர்பு கொள்ள ரஷ்ய விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் அந்த முயற்சிகள் எந்த பலனையும் கொடுக்கவில்லை, இதனை தொடர்ந்து லூனா 25 மிஷன் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 47 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யா சார்பில் நிலவுக்கு அனுப்பப்பட்ட லூனா 25 விண்கல திட்டம் தோல்வியை தழுவியுள்ளது.