ஆசிய கோப்பை 2023: இந்திய அணியில் இடம்பெறப்போகும் 17 வீரர்கள் யார்

ஆசிய கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு இன்னும் 10 நாட்களே உள்ளது. இந்த போட்டிக்கான அணியை இதுவரை பிசிசிஐ அறிவிக்கவில்லை. தகவலின்படி, 2023 ஆசிய கோப்பைக்கான இந்திய அணி திங்கள்கிழமை இன்று அறிவிக்கப்படும். பிசிசிஐ அறிவிக்க இருக்கும் 17 பேர் கொண்ட இந்திய அணியில் யாரெல்லாம் இடம்பெற போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி திங்கள்கிழமை அறிவிக்கப்படும். இதில், பிசிசிஐ தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் டெல்லியில் ஆலோசிக்கின்றனர். அயர்லாந்தில் இருக்கும் டிராவிட் வீடியோ கான்பரன்சிங்கில்  கலந்து கொள்கிறார். திங்கட்கிழமை நண்பகல் 12 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. இதன் பின்னர் ஆசியக் கோப்பைக்கான 17 பேர் கொண்ட இந்திய அணியின் வீரர்கள் பெயர்கள் பிற்பகல் 1.30 மணிக்கு அறிவிக்கப்படும்.

ஆசியக் கோப்பைக்கான அணித் தேர்வு, வரும் உலகக் கோப்பையை மனதில் வைத்து செய்யப்படும் என்று நம்பப்படுகிறது. இந்த போட்டியில் விளையாடும் வீரர்களே, உலகக் கோப்பையிலும் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அவர்களுக்கே ஆசிய கோப்பைக்கான அணியில் முன்னுரிமை கொடுக்கப்பட இருக்கிறது.  உலகக் கோப்பை 2023 அக்டோபர் 5 முதல் இந்தியாவில் தொடங்குகிறது. அகமதாபாத்தில் நடைபெறும் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன.

ஷ்ரேயாஸ் ஐயரையும் தேர்வு?

கே.எல்.ராகுல் ஆசிய கோப்பைக்கு தகுதியானவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஷ்ரேயாஸ் ஐயர் தொடர்பான நிலைமை இன்னும் தெளிவாகவில்லை. எனினும் ஆசியக் கோப்பைக்கான 17 பேர் கொண்ட அணியில் அவர் இடம்பெறுவார் என நம்பப்படுகிறது. இது தவிர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும் இந்த அணியில் இடம் பெறலாம். இத்துடன் திலக் வர்மாவும் 17 பேர் கொண்ட அணியில் சர்ப்ரைஸ் பேக்கேஜாக இடம் பெறலாம்.

ஆசியக் கோப்பைக்கான இந்தியாவின் சாத்தியமான 17 பேர் கொண்ட அணி – ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், இஷான் கிஷன் (ரிசர்வ் விக்கெட் கீப்பர்) மற்றும் திலக் வர்மா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.