இன்று முதல்… குட்பை சொல்லும் பெங்களூரு மெட்ரோ… ஸ்மார்ட் கார்டுக்கு ’நோ’, ரூபே NCMC கார்டுக்கு ’யெஸ்’!

RuPay மற்றும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் (MoHUA) ஆகியவை இணைந்து NCMC எனப்படும் தேசிய பொது இயக்க அட்டை சேவையை அறிமுகம் செய்துள்ளது. ஒரே நாடு ஒரே அட்டை (One Nation One Card) என்ற திட்டத்தின் கீழ் அனைத்து போக்குவரத்து சேவைகளிலும் பயன்படுத்தி கொள்ள முடியும். இது டச் ஃப்ரீ வசதி கொண்டது. அதாவது யாரிடமும் தர தேவையில்லை.

தேசிய பொது இயக்க அட்டை (NCMC)டிஜிட்டல் மெஷின் முன்பு காண்பித்தாலே போதும். விவரங்கள் பரிமாற்றம் செய்யப்படும். இந்த அட்டையை ஆன்லைன், ஆஃப்லைன் சேவைக்கு பயன்படுத்தி கொள்ளலாம். அதாவது, மெட்ரோ ரயில், பேருந்து பயணம், பார்க்கிங், சூப்பர் மார்க்கெட், ஏடிஎம், உணவகங்கள், ரீடெய்ல் அவுட்லெட், கேப்கள், பெட்ரோல் பங்க்குகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஒற்றை அட்டையின் மூலம் பெற முடியும்.பெங்களூரு மெட்ரோ ரயில் சேவைஇதை நாடு முழுவதும் படிப்படியாக அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெங்களூருவில் உள்ள நம்ம மெட்ரோவில் தேசிய பொது இயக்க அட்டையை விற்பனைக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட நிர்வாகம் (BMRCL) முடிவு செய்துள்ளது. அதுவும் இன்று (ஆகஸ்ட் 21) முதல் விற்பனை செய்கிறது. பெங்களூருவில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பெற்று கொள்ளலாம்.
​வெப்சைட் மற்றும் மொபைல் ஆப் வசதிகாலை 8 மணி முதல் 11 மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலான காலகட்டத்தில் உரிய கட்டணம் செலுத்தி அட்டையை பெறலாம். இதற்காக பயணிகள் KYC எனப்படும் தங்களின் அடிப்படை விவரங்களை வழங்க வேண்டும். மேலும் nammametro.agsindia.com என்ற இணையதளத்திலும், BMRCL RBL Bank NCMC மொபைல் ஆப்பை டவுன்லோடு செய்தும் பயணிகள் உரிய விவரங்களை அளிக்கலாம்.
டிக்கெட்டிற்கு சலுகைகள் உண்டுஇதையடுத்து சம்பந்தப்பட்ட தொலைபேசி எண்ணை பெங்களூரு மெட்ரோ ரயில் நிலைய டிக்கெட் விற்பனையாளரிடம் தெரிவித்து தேசிய பொது இயக்க அட்டையை பெற்றுக் கொள்ளலாம். இதன் விலை 50 ரூபாய் எனக் கூறப்பட்டுள்ளது. ஸ்மார்ட் மெட்ரோ கார்டுகளில் ஒவ்வொரு டிக்கெட்டிற்கும் எப்படி 5 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறதோ, அதேபோல் NCMC கார்டுகளிலும் தள்ளுபடி வழங்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது.​மெட்ரோ கார்டுகளுக்கு குட்பைஇந்த NCMC கார்டுகள் அனைத்து RBL வங்கி கிளைகளிலும் கிடைக்கும். இதன்மூலம் மெட்ரோ ரயில் நிர்வாகம் விற்பனை செய்து வந்த கான்டக்ட்லெஸ் ஸ்மார்ட் கார்டுகள் பயன்பாடு முடிவுக்கு வருகின்றன. இனிமேல் இந்த கார்டுகள் விற்பனை செய்யப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிமேல் NCMC என்ற ஒரே ஒரு கார்டு போதும். அனைத்து விதமான சேவைகளையும் பெற முடியும்.
பெங்களூரு மெட்ரோ புதிய திட்டங்கள்பெங்களூரு மெட்ரோவில் பர்பிள் லைன் (கெங்கேரி டூ பையப்பனஹள்ளி மற்றும் கே.ஆர்.புரம் டூ ஒயிட்ஃபீல்டு), க்ரீன் லைன் (நாகசந்திரா டூ சில்க் இன்ஸ்டிடியூட்) என இரண்டு விதமான வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்தகட்டமாக இவற்றை நீட்டிக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர மஞ்சள் லைன், பிங்க் லைன், ப்ளூ லைன் என மூன்று விதமான வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த 3, 4 ஆண்டுகளில் அனைத்து பணிகளும் முடிவடைந்து மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.