கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (வி.எஸ்.எஸ்.சி) நடத்திய தொழில்நுட்ப பணியாளர் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) ஒரு முக்கிய விண்வெளி ஆராய்ச்சி மையமான வி.எஸ்.எஸ்.சி நடத்திய இந்த பணியாளர் தேர்வு கேரளாவில் உள்ள 10 மைய்யங்களில் நடைபெற்றது. இந்த தேர்வு எழுத ஹரியானா மாநிலத்தில் இருந்து மட்டும் 469 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் அங்கிருந்து 400 பேர் தேர்வு எழுத […]
