ஜோஹன்ஸ்பர்க்: தென்னாப்பிரிக்க பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா -சீனா எல்லை பிரச்னை குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா சீனா எல்லை விவகாரம் தொடர்பாக ஏற்கனவே கமாண்டர் மட்டத்திலான பேச்சுவார்த்தையும், மேஜர் ஜெனரல் மட்டத்திலான பேச்சுவார்த்தையும்நடந்து முடிந்துள்ளன. இதில் தீர்வு காணப்படவில்லை.
இந்நிலையில் தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்ஸ்பர்க் நகரில் பிரிக்ஸ் அமைப்பின் 15-வது மாநாடு நடக்கிறது. இதில் உறுப்பு நாடு என்ற முறையில் நம் பிரதமர் மோடி, கலந்து கொள்ள தென்னாப்பிரிக்கா செல்கிறார்.
அப்போது சீனா அதிபர் ஜிஜிங்பிங்கை சந்தித்து இந்திய-சீன எல்லை பிரச்னை குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement