“கொடூரமாக முடிந்தது ராஜிவ் வாழ்க்கை” – சோனியா உருக்கம் | Rajiv Gandhis Political Career Ended In Very Brutal Manner: Sonia Gandhi

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் வாழ்க்கை கொடூரமாக முடிந்தது ஆனால் அவர் குறுகிய காலத்தில் பல்வேறு சாதனைகளை படைத்தா் என அவரது மனைவியும் முன்னாள் காங்., தலைவருமாவ சோனியா உருக்கமாக பேசினார்.

டில்லியில் ராஜிவ் தேசிய சத்பாவானா விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் மேலும் பேசியதாவது:

மறைந்த பிரதமர் ராஜிவ் இந்த நாட்டிற்கு செய்த சாதனைகள் ஏராளம். அவரது ஆட்சியில் பெண்கள் அதிகாரம் என்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தி அவர்களை அதிகாரத்தில் அமர செய்தார். அதிக இட ஒதுக்கீடு வழங்கினார். இன்று ,நகர்ப்புற அமைப்புகளில் 15 லட்சம் பெண்கள் பொறுப்பில் உள்ளனர். லட்சக்கணக்கான பெண்கள் பஞ்சாயத்து முதல் பார்லி., வரை பதவியில் உள்ளனர்.

இதற்கு ராஜிவ்வே காரணம். பஞ்சாயத்து ந்த காலம் பொறுப்பில் இருந்து அதிகம் இந்த நாட்டிற்கு சேவை செய்தவர். அவரது பணிகள் இந்த நாட்டின் மைல்கற்கள். நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமை என்பதில் அவர் உணர்வுப்பூர்வமக அறிந்து வாழ்ந்து வந்தவர். தொலைநோக்கு எண்ணம் கொண்டவர். 21 வயது ஓட்டுப்போடும் தகுதியை 18 ஆக குறைக்க ராஜிவ் தான் காரணமாக இருந்தார்.

இப்படிப்பட்ட ஒரு தலைவரின் வாழ்க்கை கொடூரமான முறையில் முடிந்தது என்பது தான் பெரும் துயரமானது. இவ்வாறு சோனியா பேசினார்.

ஸ்ரீபெரும்புதூரில் கொலை

1984 ல் இந்திரா கொல்லப்பட்டதும், இந்த ஆண்டின் அக்டோபர் மாதம் தனது 40 வது வயதில் ராஜிவ் பிரதமராக பொறுப்பேற்றார். டிசம்பர் 2 1989 வரை அவர் பிரதமராக இருந்தார். 1991 மே 21 ல் தேர்தல் பிரசாரத்திற்கு வந்தபோது ராஜிவ் ஸ்ரீபெரும்புதூரில் புலிகள் இயக்கத்தினரால் கொடூரமாக கொல்லப்பட்டார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.