டாஸ்மாக் இலவச வசதி… பார்களுக்கு தாறுமாறு கெடுபிடி… சாட்டையை சுழற்ற ரெடியாகும் அமுதா ஐஏஎஸ்!

டாஸ்மாக் என்றதும் தமிழக அரசின் கைகளில் மதுபான விற்பனை இருப்பதை புரிந்து கொள்ளலாம். ஏனெனில் இதன் பெயரே அப்படித்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. Tamil Nadu State Marketing Corporation என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கமே TASMAC. இது தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் சுங்க வரித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறை விற்பனையாக வர்த்தகம் செய்யும் உரிமையை மாநில அரசு பெற்றிருக்கிறது.

அமைச்சர் முத்துசாமி80களில் தொடங்கி 2023 வரை படிப்படியாக மேம்படுத்தப்பட்டு வந்துள்ளது. மதுபானங்கள் தொடர்பான துறையின் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில் அமைச்சர் முத்துசாமி வசம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. பாட்டிலுக்கு 10 ரூபாய், 5 ரூபாய் கமிஷன் வாங்கும் சர்ச்சை மட்டும் இன்னும் ஓய்ந்தபாடில்லை.மின் கட்டணமும், கூட்டுறவு சொசைட்டியும்டாஸ்மாக் கடைகளில் பல்வேறு புதிய வசதிகளை கொண்டு வர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பயன்படுத்தப்படும் மின்சார கட்டணத்தை நிர்வாகம் பார்த்து கொள்ளும் என்று அமைச்சர் முத்துசாமி மகிழ்ச்சியூட்டும் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். மேலும் கூட்டுறவு சொசைட்டி உருவாக்கப்பட்டு டாஸ்மாக் ஊழியர்கள் குறைந்த வட்டியில் கடன் பெறும் வசதியும் கொண்டு வரப்படும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
​டாஸ்மாக் பாட்டில்கள் சேத இழப்பீடுஇதுதவிர சேதமடைந்த பாட்டில்களுக்கு 0.001 சதவீதம் இழப்பீடு வழங்கும் வகையில் 5.13 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கை டாஸ்மாக் வரலாற்றில் முதல்முறை என்பது கவனிக்கத்தக்கது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளை ஒட்டி செயல்படும் பார்கள் குறித்து தொடர் சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. ஏனெனில் அரசிடம் முறையாக அனுமதி பெற்று, உரிய டெண்டரின் அடிப்படையில் செயல்படுத்த வேண்டும்.
​சட்ட விரோத டாஸ்மாக் பார்கள்ஆனால் முறைகேடான வகைகளில் பணம் கொடுத்து சட்ட விரோதமாக செயல்படுத்தி வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது. அதுமட்டுமின்றி சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் ஜூலை 2022க்கு பின்னர் டாஸ்மாக் பார்கள் எதுவும் தங்களது ஒப்பந்தத்தை புதுப்பிக்க வில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக மதுபானக் கடைகளின் மேற்பார்வையாளர்கள் பலரும் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு புகார்களை முன்வைத்து வருகின்றனர்.
விரும்பத்தகாத செயல்கள்இவை அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி, அசம்பாவித சம்பவங்களையும் ஏற்படுத்தி விடுகின்றன. மதுபானங்களை வாங்கி பார்களில் சென்று குடிப்பவர்கள், போதையில் டாஸ்மாக் கடைகளில் புகுந்து தகராறு செய்வது, கல்லா பெட்டியை தூக்கி கொண்டு ஓடுவது, டாஸ்மாக் மேற்பார்வையாளர்களை தாக்குவது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது என அதிரி புதிரி சம்பவங்கள் பலவும் நடந்து வருகின்றன.
​இலவச தொலைபேசி எண்டாஸ்மாக் பார்களை மூடுமாறு சம்பந்தப்பட்ட மேலாளர்கள் கூறினால் ரவுடிகளுடன் வந்து தாக்குதல் நடத்துவது அதிகரித்து கொண்டிருக்கிறது. இதனால் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அச்சத்துடன் இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சிக்கல்களுக்கு முடிவு கட்டும் வகையில் இலவச தொலைபேசி எண்ணை அறிமுகம் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
​ஆக்‌ஷனில் அமுதா ஐஏஎஸ்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.