வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி,: பலாத்காரத்திற்குள்ளாக்கப்பட்ட 17 வயது சிறுமியை பார்க்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்ததால் டில்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால் மருத்துவமனையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
புதுடில்லியில், அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் பணிபுரிந்த மூத்த அதிகாரி பிரமோதாய் ஹக்கா, தன் நண்பரின் 17 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் கர்ப்பம் அடைந்த சிறுமிக்கு, அவரது மனைவி மருந்துகளை வாங்கி தந்து வீட்டிலேயே கருவை கலைத்துள்ளார். இது குறித்து போலீசில் புகார் கூறப்பட்டதால் பிரமோதாய் ஹக்கா அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் உடல் நிலை மோசமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமியை பார்க்க டில்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவாலுக்கு மறுப்பு தெரிவித்ததால், மருத்துவமனை வளாகத்திலேயே அமர்ந்து நள்ளிரவு தாண்டியும் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement