செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மே 13ஆம் தேதி காலை விசாரணைக்காக அவர் வீட்டுக்கு அமலாக்கத்துறை சென்றது. அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். மூன்று மாதங்களுக்கும் மேலாக செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் விரைந்து நடவடிக்கை எடுக்க முடியவில்லையே என்ற வருத்தம் அமலாக்கத்துறைக்கு இருக்கிறதாம்.
இந்தியா கூட்டணியை பதம் பார்க்க முயற்சி!இதனால் அடுத்து சிலரை குறி வைக்கும் போது முக்கிய விஷயங்கள் சிலவற்றில் கவனமாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக ‘இந்தியா’ கூட்டணியை பதம் பார்க்கும் வேலையில் பாஜக அரசு இறங்க உள்ளதாக சொல்கிறார்கள்.
பாஜகவின் வடக்கு Vs தெற்கு“மோடியோ, அமித் ஷாவோ தமிழ்நாடு வரும்போது மட்டுமல்லாமல் எந்த கூட்டத்தில் பேசினாலும் திமுகவை கடுமையாக விமர்சித்துவருகிறது. திமுக ஊழல்கட்சி என்றொரு விமர்சனத்தை வைத்து திமுக அமைச்சர்கள் சிலரை கைது செய்து சிறையில் அடைக்க முயல்கிறது. பாஜக இந்த தேர்தலை வடக்கு Vs தெற்கு என்று தான் பார்க்கிறது. தெற்கில் இந்த முறை தங்களுக்கு பெரிய வரவேற்பு இருக்காது என நினைக்கும் பாஜக, வடக்கில் அதிக கவனம் செலுத்துகிறது.
திமுகவை எதிரியாக காட்ட திட்டம்!வடக்கில் உள்ளவர்களிடம் இந்தியா கூட்டணியை ஒருங்கிணைக்கும் திமுகவை எதிரியாக சித்தரிக்கிறது. பாகிஸ்தானை காட்டி இந்தியர்கள் அனைவரையும் தங்கள் பக்கம் இழுக்க வழக்கமாக திட்டமிடுவார்களே அதேபோல், திமுகவை காட்டி வட இந்தியர்களை தங்கள் பக்கம் இழுக்க திட்டமிடுகிறது. தென் மாநிலங்களில் பொறுத்தவரை பாஜகவை எதிர்க்கும் வலிமையான ஒரே பிராந்திய கட்சி திமுக மட்டும் தான்.
திமுக அமைச்சர்கள் டார்கெட்!எனவே திமுக அமைச்சர்கள் மேலும் சிலரை அமலாக்கத்துறை வளைக்க முயற்சிக்கும். பொன்முடியையும், அவரது மகனையும் அழைத்து விசாரணை நடத்தியது. அதிலிருந்தே பொன்முடி மிகவும் அப்செட் ஆகிவிட்டார். அவருக்கு எதிரான புகார்களை, கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து மேலும் அதிகரிக்க திட்டமிடப்படுகிறது. அதைத் தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணன், மூர்த்தி உள்ளிட்டோரையும் வளைக்க திட்டமிடப்படுவதாக சொல்கிறார்கள்.
ஸ்டாலின் குடும்பத்துக்கு ஷாக்!
இதைவிட முக்கியமாக ஸ்டாலின் வீட்டுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் ஒரு சோதனையை நடத்தவும் திட்டம் இருக்கிறதாம். நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் ஆளுநர் ரவியை அதிகமாக வறுத்தெடுத்தார். இதை டெல்லி ரசிக்கவில்லை. விரைவில் ஸ்டாலின் குடும்பத்தினருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க திட்டமிடப்படுகிறது” என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தினர்.