பெஷாவர்,
பாகிஸ்தானில், ஆற்றின் குறுக்கே இயக்கப்படும், ‘ரோப்கார்’ தொழில்நுட்பக் கோளாறால் நடுவில் நின்றது. அதில் சிக்கிய, இரண்டு குழந்தைகள் மீட்கப்பட்டனர்.
அந்தரத்தில் பரிதவிக்கும், ஆறு பேரை மீட்பதற்கான முயற்சி நடந்து வருகிறது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் பட்டாகிராம் மாவட்டம் அல்லாய் பகுதியில், ஆற்றின் குறுக்கே, சாலை மற்றும் பாலம் வசதி இல்லாததால், ரோப்கார் எனப்படும் கம்பி வழி போக்குவரத்து பயன்படுத்தப்படுகிறது.
இந்த ரோப்கார் வழியாக, ஆறு குழந்தைகள், இரண்டு பெரியவர்கள் நேற்று காலையில் ஆற்றை கடக்க முயன்றனர்.
நடுவழியில், அதில் இருந்த கம்பி ஒன்று திடீரென அறுந்தது. இதனால், அந்த ரோப்கார் நடுவழியில் நின்றது.
தரையில் இருந்து, 900 அடி உயரத்தில், இந்த ரோப்கார் சிக்கியது.
இதையடுத்து, ராணுவத்தின் சிறப்பு அதிரடிப் படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். 10 மணி நேர போராட்டத்துக்குப் பின், இரண்டு குழந்தைகள் மீட்கப்பட்டனர்.
மற்றவர்களை மீட்கும் முயற்சி தொடர்ந்து நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement