புதுடில்லி: ஜி-20 நாடுகளின் மாநாட்டையொட்டி டில்லியில் கல்வி மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு மூன்று நாள் அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
டில்லி பிரகதி மைதானத்தில் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி டில்லி மாநில அரசின் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள செய்தியில், வரும் செப்.8 முதல் 10 வரை ஜி20 மாநாடு நடைபெறுகிறது. இதையடுத்து பள்ளி மற்றும் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement