திருவனந்தபுரம் கேரள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கின் விசாரணையைத் தள்ளி வைக்கக் கோரிய நடிகர் திலீப் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஒரு பிரபல மலையாள நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கு எர்ணாகுளம் தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த நடிகையை பாலியல் துன்புறுத்தல் செய்த போது, குற்றத்தில் ஈடுபட்ட கும்பல் அதை செல்போனில் பதிவு செய்தது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகப் பிரபல நடிகர் திலீப் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் கைதான பல்சர் சுனில் என்பவரிடமிருந்து, பாலியல் துன்புறுத்தல் காட்சிகள் அடங்கிய மெமரி […]
