விண்கலம் தரையிறக்கும் நிகழ்வு: மோடி பார்வையிட ஏற்பாடு| Spacecraft landing event: Modi set to visit

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஜோஹன்ஸ்பர்க்: சந்திராயன் -3 விண்கலம் நிலவில் தரையிறக்கும் நிகழ்வை பிரதமர் மோடி தென்னாப்பிரிக்காவில் இருந்தபடி பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள, சந்திரயான் – 3 விண்கலத்தின், ‘லேண்டர்’ சாதனத்தை, இன்று (ஆகஸ்ட்23) மாலை 6:04 மணிக்கு வெற்றிகரமாக தரையிறக்க, இஸ்ரோ விஞ்ஞானிகள் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

latest tamil news

இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை காண்பதற்காக உலக நாடுகள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றன.இந்நிலையில் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க தென்னாப்பிரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, விண்கலம்தரையிறக்கும் நிகழ்வை அங்கிருந்து பார்வையிட உள்ளதாகவும், இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.