டில்லி டில்லி விமானநிலையத்தில் ஒரே நேரத்தில் இரு விமானங்களுக்கு புறப்பட மற்றும் தரை இறங்க சிக்னல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை டில்லியில் இருந்து மேற்கு வங்காளத்தின் பாக்டோக்ரா நகருக்கு செல்லும் யு.கே.725 விமானம் டில்லி விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாராகிக் கொண்டு இருந்தது. ஆனால் அதே நேரத்தில் அகமதாபாத் நகரில் இருந்து டில்லிக்கு வந்த ‘விஸ்தாரா’ விமானம், டில்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது. ஒரே நேரத்தில் இந்த இரு விமானங்களுக்கும் புறப்படுவதற்கும், தரையிறங்குவதற்கும் சிக்னல் கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு […]