தலைவர் 170 படத்திற்காக டோட்டலாக மாறும் ரஜினி..இப்படி ஒரு கெட்டப்பா ? ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான்..!

ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. நெல்சனின் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் வெளியான இப்படம் ரஜினிக்கு எதிர்பார்த்த வெற்றியை பெற்று தந்துள்ளது. இன்னும் சொல்லவேண்டுமென்றால் ரஜினி எதிர்பார்ப்பதை விட ஜெயிலர் சிறப்பாக வந்துள்ளதாகவும், எதிர்பார்ப்பை மீறி வெற்றபெற்றுள்ளதாகவும் ரஜினியே சொன்னதாக நெல்சன் பேசியிருந்தார்.

இதன் காரணமாக உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கும் ரஜினி அதே வேகத்தில் தன் அடுத்த பட வேலைகளையும் துவங்கவுள்ளார். லைக்காவின் தயாரிப்பில் உருவாகும் தலைவர் 170 திரைப்படத்தில் ஞானவேலின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. பொதுவாக கமர்ஷியல் படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் ரஜினி கமர்ஷியல் சினிமாவிற்கு அப்பாற்பட்டு படங்களை இயக்கும் ஞானவேலின் இயக்கத்தில் நடிக்கின்றார் என்றவுடன் எதிர்பார்ப்பு அதிகரித்தது.

விடாமுயற்சியால் வரலாறு படைத்த அஜித்..சோதனைகளை மீறி சாதனை படைத்த அஜித்தின் திரைப்படங்கள் ஒரு பார்வை ..!

இதையடுத்து நாளுக்கு நாள் இப்படத்தை பற்றி பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. அதெல்லாம் உண்மையா இல்லை வதந்தியா என்பது பற்றி தெரியவில்லை என்றாலும் இத்தகவல்கள் படத்தின் ஹைப்பை அதிகரித்து வருகின்றது.

தலைவர் 170 லுக்

இந்நிலையில் இப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட இருப்பதாக பேசப்பட்டு வருகின்றது. மேலும் போலி என்கவுண்டர் பற்றிய படமாக தலைவர் 170 இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதைத்தொடர்ந்து இப்படத்தில் ரஜினி ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம். அதற்காக டோட்டலாக தன் கெட்டப்பை ரஜினி மாற்ற இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

ஏனென்றால் ஜெயிலர் படத்திலும் ரஜினி போலீஸ் அதிகாரியாகத்தான் நடித்தார். என்னதான் ரஜினி போலீஸ் கெட்டப்பில் ஜெயிலர் படத்தில் ஐந்தே நிமிடங்கள் வந்தாலும் ஓய்வு பெற்ற ஜெய்லராகத்தான் படம் முழுக்க வருவார். இந்நிலையில் தலைவர் 170 படத்திலும் போலீஸ் வேடம் என்பதால் இப்படத்திற்காக தன் லுக்கை முற்றிலும் மாற்ற இருக்கிறாராம் தலைவர்.

வித்யாசம் காட்டும் ரஜினி

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

முறுக்கு மீசை தாடியெல்லாம் வைத்து லுக்கில் வித்யாசம் காட்ட முடிவெடுத்துள்ளார் ரஜினி. எனவே தலைவர் 170 படத்தில் ரஜினியை ரசிகர்கள் வித்யாசமான ஒரு லுக்கில் பார்க்கலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து தற்போது தலைவர் 170 படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருப்பதாகவும், விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.