வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மாஸ்கோ: காய்கறிகள், வேளாண் பொருட்களின் விலை உயர்வு காரணமாக பணவீக்கம் அதிகரித்து ஏழை நாடுகளை அதிகமாக பாதித்துள்ளது என ரஷ்ய அதிபர் புடின் வருத்தம் தெரிவித்துள்ளார்.

பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த அமைப்பின், 15வது உச்சி மாநாடு, ஆப்ரிக்க நாடான தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில், நேற்று துவங்கியது. வரும் 24ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் நேரடியாக கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளார்.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் புடின் பிரிக்ஸ் மாநாட்டில் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது ரஷ்ய அதிபர் புடின் பேசியதாவது: அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளின் சட்டவிரோதமான பொருளாதாரத் தடைகளால் சர்வதேச பொருளாதார நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதம்:

பொருளாதார வாழ்வையும், சுதந்திரமான வர்த்தகத்திற்கான அடிப்படை விதிகள் மதிக்கப்படுவதில்லை. காய்கறிகள், வேளாண் பொருட்களின் விலை உயர்வு காரணமாக பணவீக்கம் அதிகரித்து ஏழை நாடுகளை அதிகமாக பாதித்துள்ளது. சில நாடுகளில் ரஷ்யாவின் சொத்துகள் முடக்கப்பட்டதும், பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டதும் சட்டவிரோதமானது. இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement