மாஸ்கோ,:ரஷ்ய அதிபருக்கு எதிராக புரட்சி நடத்தி தோல்வி அடைந்த, எம்ஜெனி பிரிகோஜின், விமான விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக, ஜூன் மாத இறுதியில் தனியார் ராணுவப் படையை வைத்து புரட்சி செய்தவர் எம்ஜெனி பிரிகோஜின். ஆனால், அதை முறியடித்த ரஷ்ய ராணுவம், பிரிகோஜின் நாடு கடத்தப்படுவார் என அறிவித்தது.
இந்நிலையில், மாஸ்கோவிலிருந்து, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சென்ற ஜெட் விமானம் நேற்று விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில், 10 ேபர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயணியர் பட்டியலில், பிரிகோஜின் பெயர் இருந்தது. ஆனால், அவர் விமானத்தில் பயணம் செய்தாரா என உறுதிப்படுத்தப்படவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement