இஸ்ரோ ஏவுதளம் தமிழகத்தில் இருந்து கைநழுவி போனதற்கு காரணம் இதுதானா? அண்ணாமலை பகீர்!

தமிழ் நாடு மாநில பாஜக தலைவரான அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது பேசிய அவர் “நேற்றய நாள் மகத்தான நாள், முண்டாசுக் கவிஞர் பாரதியாரின் கனவு பலித்தது, இந்தியா நிலவில் தடம் பதித்துள்ளது. சந்திரயான் 3 விண்கலத்தின் சில உதிரி பாகங்கள் கோவையில் தயாரிக்கப்பட்டது. இந்தியாவின் இந்த மகத்தான சாதனையை நியூயார்க் டைம்ஸ் பாராட்டியுள்ளது. ரஷ்ய அதிபர் புடின் பாராட்டியுள்ளார்.

சந்திரயான் 3 மூலம் பெறப்படும் தகவல்கள் உலக நாடுகளுக்கு பகிரப்படும் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். சந்திரயான் 3 திட்டம் ஒரு படத்தை விட குறைவான செலவில், 75 மில்லியன் ரூபாயில் முடிந்துள்ளது. எல்லோருடைய கடின உழைப்புதான் சந்திரயான் 3 வெற்றிக்கு காரணம். அடுத்தடுத்து நம் விஞ்ஞானிகளுக்கு சவால்கள் உள்ளன. இந்த சந்திரயான் 3 வெற்றிக்கு காரணம் முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன், அவருக்கும் நாம் நன்றி தெரிவிக்க வேண்டும்.

தமிழகத்திற்கும் இஸ்ரோவுக்கும் நீண்ட பந்தம் உள்ளது. சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், இங்கு வரும்போது சொல்லுங்கள் வந்து சந்திக்கிறேன் என்கிறார். நாகப்பட்டினத்தில் அமைய இருந்த இஸ்ரோ ஏவுதளத்தை கோட்டைவிட்டதே திமுகதான். இஸ்ரோவின் ஏவுதளத்தை தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைக்கதான் இந்திய அரசு முடிவு செய்திருந்தது.

சமநீதி, சமூகநீதி இதுதான் மோடியின் கொள்கைகள்

ஆனால்

அமைச்சரால் அந்த வாய்ப்பு பறிபோனது. இதுதொடர்பான கூட்டத்திற்கு அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த அண்ணாதுரையால் செல்லமுடியாமல் போதால் திமுக அமைச்சர் ஒருவர் 4 மணி நேரம் தாமதமாக தள்ளாடியபடியே சென்று பங்கேற்றார். இதனை பார்த்து மனம் வெதும்பி போன ராக்கெட் ஆய்வாளரான சதீஷ் தவான், இஸ்ரோ ஏவுதளத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் அமைக்க ஒப்புதல் கொடுத்தார்.

இதனை சதீஷ் தவானுடன் இருந்த நம்பி நாராயணன் ரெடி டூ ஃபயர் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆதாரத்துடன் சொல்கிறேன், நாகப்பட்டினத்தை கோட்டைவிட்டது திமுகதான். இஸ்ரோ ஏவுதளத்தை ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொடுத்திருக்க கூடாது. தற்போது இஸ்ரோவின் இரண்டாவது லாஞ்சிங் பாயிண்ட்

குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்பட உள்ளது. இதையும் கோட்டை விட்டுவிடக்கூடாது”… என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.