ஏரோஸ்பேஸ், டிபன்ஸ் பங்குகளுக்கு அதிக வரவேற்பு

சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தடம் பதிப்பதை உலகமே எதிர்பார்த்திருந்த வேளையில், இந்திய சந்தைகளில் ஏரோஸ்பேஸ், டிபன்ஸ் பங்குகளுக்கு முதலீட்டாளர்களிடையே வரவேற்பு அதிகரித்து காணப்பட்டது.

மும்பை பங்குச் சந்தையில் நேற்றை வர்த்தகத்தில் சென்டம் எலக்ட்ரானிக்ஸ் பங்கின் விலை அதிகபட்சமாக 14.91 சதவீதம் ஏற்றம் கண்டது. மேலும், பரஸ் டிபன்ஸ் அண்ட் ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் 5.47 சதவீதமும், எம்டிஏஆர் டெக்னாலஜீஸ் 4.84 சதவீதமும், ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் பங்கின் விலை 3.57 சதவீதமும் அதிகரித்தன.

அதேபோன்று, பாரத் போர்ஜ் 2.82 சதவீதமும், அஸ்ட்ரா மைக்ரோவேவ் 1.72 சதவீதமும், லார்சன் அண்ட் டூப்ரோ பங்கின் விலை 1.42 சதவீதமும் உயர்ந்தன.

நேற்றைய வர்த்தகத்தில் இத்துறைகளைச் சேர்ந்த பெரும்பாலான நிறுவனப் பங்குகளின் விலையானது 52 வாரங்களில் இல்லாத அளவில் உச்ச அளவை தொட்டதாக பங்குச் சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் 213 புள்ளிகள் உயர்ந்து 65,433-ஆகவும், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 47 புள்ளிகள் அதிகரித்து 19,444 ஆகவும் நிலைபெற்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.