செந்தில் பாலாஜிக்கு அடுத்த 3 நாட்கள்… காவல் கிடுக்குப்பிடி… கறார் காட்டிய சிறப்பு நீதிமன்றம்!

அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து அவரை சுற்றி விசாரணை வளையம் பின்னப்பட்டு விட்டது. பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பின்னர் காவேரி மருத்துவமனையில் ஓய்வெடுத்து வந்தார். வெளியே வந்ததும் நிலைமை தலைகீழாக மாறியது. எப்படியாவது விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வந்துவிட வேண்டும் என்று அமலாக்கத்துறை தீயாய் வேலை செய்தது.

ED கஸ்டடியில் செந்தில் பாலாஜி

டெல்லிக்கு பறக்கும் ரிப்போர்ட்

உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி தீவிர விசாரணைக்கு அச்சாரம் போடப்பட்டது. விசாரணை தொடங்கியதில் ஒவ்வொரு கட்டமாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இவரிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களை வீடியோவாக பதிவு செய்து வருகின்றனர். மேலும் எழுத்துப்பூர்வமாகவும் சேகரித்துள்ளனர். இவற்றை டெல்லிக்கு அனுப்பி வைத்து நெருக்கடியை மேலும் அதிகரிக்க திட்டமிட்டிருப்பதாக பேச்சு அடிபடுகிறது.

செந்தில் பாலாஜி தம்பி எங்கே?

ஆனால் தனக்கு எதுவும் தெரியும் என்று கூறி தனது தம்பி அசோக் குமாரை கைகாட்டி வருகிறாராம் செந்தில் பாலாஜி. எனவே தான் அசோக் குமாரை பிடிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் செந்தில் பாலாஜியிடம் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தயாரிக்கும் வேலைகள் ஒருபுறம் மும்முரமாக நடந்து வருவதாக தெரிகிறது. இதையடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருந்து சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.

Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்.

சிறப்பு நீதிமன்றம் விசாரணை

தற்போது எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் செந்தில் பாலாஜி வழக்கை விசாரித்து வருகிறது. இன்றுடன் நீதிமன்ற காவல் முடிவடைகிறது. இதையொட்டி இன்றைய தினம் விசாரணைக்காக சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். நேரில் வரவில்லை. புழல் சிறையில் இருந்தவாறு காணொலி ஆட்சி மூலம் ஆஜரானார்.

அமலாக்கத்துறை கிடுக்குப்பிடி

அதில், வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அடுத்தடுத்து அமலாக்கத்துறை விசாரணையில் சிக்கி வரும் செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திமுக தலைமைக்கு நெருக்கடி

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தளபதி போன்று கொங்கு மண்டலத்தில் வெற்றி வாகை சூட பெரிதும் உழைத்தவர் செந்தில் பாலாஜி. இவருடைய கைது திமுக தலைமைக்கு பின்னடைவு தான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். தேர்தல் வருவதற்கு இன்னும் 9 மாதங்கள் இருக்கும் நிலையில், விசாரணை எந்த திசையை நோக்கி செல்லும்? திமுகவின் சட்டப் போராட்டங்கள் சிறை கதவுகளை திறந்துவிடுமா? போன்றவை மில்லியன் டாலர் கேள்வியாக மாறியுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.