விஜயகாந்த் எப்படி இருக்கிறார் தெரியுமா? தேமுதிக தொண்டர்கள் உற்சாகம்!

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த

கடந்த சில ஆண்டுகளாகவே பொது நிகழ்ச்சிகளை தவிர்த்து வந்தார். கட்சி நிகழ்ச்சிகள், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவது, தேர்தல் சமயத்தில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, பிரச்சாரம் செய்வது என அனைத்துப் பணிகளையும் பிரேமலதா விஜயகாந்தே மேற்கொண்டு வருகிறார்.

விஜயகாந்த் உடல்நிலை எப்படி இருக்கிறது என்று அவரது ரசிகர்களும்,

தொண்டர்களும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இதனால் அவ்வப்போது குடும்பத்துடன் விஜயகாந்த் இருக்கும் புகைப்படத்தை அவரது மகன்கள் வெளியிடுவார்கள்.

இந்த சூழலில் ஆகஸ்ட் 25 விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நேரடியாக தொண்டர்களை சந்திப்பார் என்று கூறப்பட்டது. இதனால் காலை முதலே சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் குவியத் தொடங்கினர்.

நாற்காலியில் அமர்ந்த படியே தொண்டர்களை பார்த்து லேசாக கை அசைத்தார். அவரது டிரேட் மார்க் முத்திரையாக தொண்டர்களை நோக்கி ‘தம்ஸ் அப்’ காட்டினார்.

கரூர் குளித்தலை பெரிய காண்டியம்மன் கோவில் குடமுழுக்கு விழா வெகு விமர்ச்சையாக நடைபெற்றது.

முதுமை ஒரு பக்கம், உடல்நலப் பிரச்சினைகள் ஒரு பக்கம் என வாட்ட உடல் மெலிந்து காணப்படுகிறார் விஜயகாந்த். இருப்பினும் தொண்டர் படையை பார்த்ததும் உற்சாகமானார். நீண்ட நாள்கள் கழித்து விஜயகாந்தை பார்த்ததும் தொண்டர்களும் ஆரவாரம் செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், “தேமுதிகவில் எந்த தொய்வும் இல்லை. கட்சியினர் யாருக்கு, எப்போது, என்ன பதவி கொடுக்க வேண்டும் என்பது கேப்டனுக்கு தெரியும். அவர்தான் முடிவெடுத்து அறிவெடுப்பார். தேர்தல் சமயத்தில் கூட்டணி குறித்து கேப்டன் அறிவிப்பார்.

கட்சியின் பொதுக் குழு கூட்டம் சென்னையில் விரைவில் நடைபெறும். அது குறித்து உங்களுக்கு முறைப்படி அறிவிக்கப்படும்.

சென்னை சாலைகள் மிக மோசமாக உள்ளன. டூ விலரில் செல்பவர்களிடம் சென்னையை பற்றி கேட்டுப் பாருங்கள். முதுகு வலியுடன் பயணம் செய்கிறார்கள். இது தொடர்பாக கேப்டன் நேற்று அறிக்கை கொடுத்திருக்கிறார். ஸ்டாலின் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.