சிங்கப்பூர் அரசு அதிகாரியை சரமாரியாக தாக்கிய இந்திய பெண்… தட்டி தூக்கிய போலீஸ்… அதிரடி தண்டனை!

சிங்கப்பூரில் வசித்து வருபவர் கே சாந்தி கிருஷ்ணாசமி. இந்திய வம்சாவளியை சேர்ந்த இவரது மகன் கவின்சரங் ஷின், கடந்த 2021ஆம் ஆண்டு சிங்கப்பூர் அரசு இளைஞர்களுக்கு விதித்துள்ள கட்டாய தேசிய சேவைக்கான அடிப்படை ராணுவப் பயிற்சி மையத்தில் சேர தவறிவிட்டார்.

இதையடுத்து இதுகுறித்து விசாரிக்க சிங்கப்பூர் அரசின் மத்திய மனிதவளத் தளத்தின் (சிஎம்பிபி) பணியமர்த்தல் ஆய்வாளரை சாந்தி கிருஷ்ணசாமியின் வீட்டிற்கு விசாரிக்க சென்றுள்ளார். அப்போது அவரிடம் ஆவேசமாக பேசிய சாந்தி, அந்த அதிகாரியை சரமாரியாக அடித்து விரட்டியுள்ளார்.

நெருங்கும் வடகிழக்கு பருவமழை… அதிரடி ஆக்ஷனில் இறங்கிய மின்வாரியம்!

சாந்தி, அந்த அதிகாரியை அடித்து விரட்டும் காட்சிகள் அவர் அணிந்திருந்த உடையில் அமைக்கப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியிருந்தது. இதையடுத்து அந்த அதிகாரி அளித்த புகாரின் பேரில் சாந்தி கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

53 தாய்மார்களுக்கு தல 1000 ரூபாய் மதிப்பிலான பொருட்கள்

இந்நிலையில் இந்த வழக்கில் மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் கோ நேற்று தீர்ப்பளித்தார். அதன்படி சாந்திக்கு 18 வாரங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது நீதிபதி தண்டனைக்கான காரணங்களை கூறிய போது, சாந்தி பலமுறை குறுக்கிட்டார். ஆனாலும் தண்டனைக்கான காரணத்தை கூறிய நீதபதி, சாந்தி அரசு அதிகாரியிடம் எவ்வளவு ஆக்ரோஷமாக நடந்து கொண்டார் என்பது கேமராக காட்சிகளில் தெளிவாக தெரிந்தது என்றார்.

ஜப்பானின் ‘ஸ்மார்ட் லேண்டர்’ நிலவு திட்டம் ஒத்திவைப்பு… மோசமான வானிலையால் அதிரடி முடிவு!

அதிகாரியை பலமுறை இழுத்து தள்ளியதோடு காயம் ஏற்படும் அளவுக்கு அவரை தாக்கியதையும் நீதிபதி சுட்டிக்காட்டினார். அதிகாரி தாக்குதலை நிறுத்துமாறு கூறியும் சாந்தி தொடர்ந்து அவரை தாக்கியதை கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது என்றும் கூறிய நீதிபதி தான் செய்த தவறை சாந்தி உணரவில்லை, அதற்காக மன்னிப்பு கேட்கவும் அவர் முயற்சி செய்யவில்லை என்றும் நீதிபதி தெரிவித்தார்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்.

அரசு அதிகாரியை தாக்கியதற்காக இந்திய வம்சாவளி பெண் ஒருவருக்கு நீதிமன்றம் 18 வாரங்கள் சிறை தண்டனை விதித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே சாந்தி தனது தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.

இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவிகளை செய்யும்.. அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.