வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், அங்குள்ள தேசிய பூங்காவுக்கு பெண்கள் செல்வதற்கு தலிபான் ஆட்சியாளர்கள் தடை விதித்துள்ளனர்.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், 2021ல் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் விலகியதை அடுத்து, தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அப்போது முதல், அங்கு பெண்கள் மீதான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
பள்ளிகளுக்குச் செல்லத் தடை, அலுவலகங்களில் பணிபுரியத் தடை, கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தத் தடை என, நாளுக்குநாள் அடக்குமுறைகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
![]() |
இந்நிலையில், மத்திய பாமியான் மாகாணத்தில் உள்ள பேந்த் – இ – அமீர் என்னும் தேசிய பூங்காவுக்கு செல்லும் பெண்கள், ஹிஜாப் அணிவதில்லை என சமீபத்தில் புகார் எழுந்தது. இதையடுத்து, அங்கு செல்ல பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
‘சுற்றுலாத் தலமான தேசிய பூங்காவுக்கு செல்லும் பெண்கள். இனி தலிபான்களால் தடுத்து நிறுத்தப்படுவர்’ என அந்த நாட்டு நல்லொழுக்க அமைச்சகம் தெரிவித்துஉள்ளது.
சமீபத்தில், அங்குள்ள மத குருக்களை சந்தித்த அமைச்சர் முகமது காலிப் அனாபி, ஹிஜாப் அணிவதை பெண்கள் முறையாக கடைப்பிடிக்கவில்லை என குற்றஞ்சாட்டியதை அடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement