இரண்டு நாள்கள் அடித்து வெளுக்கும் கனமழை: மக்களே உஷார் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக் கால் பகுதிகளில் இன்று முதல் ஏழு நாள்களுக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், “தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (ஆகஸ்ட் 28) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை என ஐந்து மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்

பெய்யவாய்ப்புள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளைய தினம் (ஆகஸ்ட் 29) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை என ஒன்பது மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் திருக்கோவில் அருகே 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான மரம் சாய்ந்து 1குடிசை வீடு சேதம்

மாதத்தின் இறுதி இரு நாள்கள் (ஆகஸ்ட் 30, 31) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செப்டம்பர் 1ஆம் தேதி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செப்டம்பர் 2 மற்றும் 3ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.